மாசி களரி திருவிழா


மாசி களரி திருவிழா
x
தினத்தந்தி 18 Feb 2023 6:45 PM (Updated: 18 Feb 2023 6:46 PM)
t-max-icont-min-icon

கமுதி பகுதியில் மாசி களரி திருவிழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி நகருக்கு காவல் தெய்வமாக விளங்கும் கோட்டை முனீஸ்வரன் கோவில், கமுதி மேட்டுத்தெரு நாகை அங்காளபரமேஸ்வரி கோவில் உச்ச மாகாளியம்மன் கோவில், வழிவிட்ட அய்யனார் கோவில், முதல்நாடு நல்ல காட்சி அம்மன் கோவில் மற்றும் அபிராமம், கோவிலாங்குளம், மண்டலமாணிக்கம், மேலக்கொடுமனூர் பகுதிகளிலுள்ள குலதெய்வ கோவில்களில் மாசித்திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, மதுரை, காரைக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மற்ற ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். மாசி களரி திருவிழாவிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் சேவல்களை காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.


Related Tags :
Next Story