மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநில வன்முறை, கலவரம், துப்பாக்கி சூடு, வீடுகள் தீக்கிரை சம்பவங்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், முன்னாள் எம்.பி., விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமணன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பேசினார்கள். இதில் நிர்வாகிகள் பெருமாள், சுடலைராஜ், கனகராஜ், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story