மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

கொல்லங்கோடு பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கொல்லங்கோடு வட்டாரக்குழு சார்பில் கண்ணநாகம் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டார செயலாளர் அஜித் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி கண்டன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இதில் வட்டாரக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story