மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சேதுபதி (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கருவந்தா கோவில் கொடை விழாவுக்கு சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கடந்த 6 நாட்களாகியும் கொலை குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை எனக்கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பேட்டை முனிசிபாலிட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நெல்லை தாலுகா தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் செந்தில் மோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மோகன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். இதில் சேதுபதியின் உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story