பரமத்திவேலூர் சந்தையில் வெற்றிலை விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை


பரமத்திவேலூர் சந்தையில்  வெற்றிலை விலை வீழ்ச்சி  விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் சந்தையில் வெற்றிலை விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள ஏல சந்தையில் வெற்றிலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வெற்றிலை

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான பாண்டமங்கலம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வெற்றிலைகள் கர்நாடகா, கேரளா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விவசாயிகள் கவலை

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்து 700-க்கும், வெள்ளை கொடி வெற்றிலை முதியம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் மார் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,800-க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story