ஊட்டியில் மாரத்தான் போட்டி


ஊட்டியில் மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 8 Oct 2023 3:30 AM IST (Updated: 8 Oct 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் மாரத்தான் போட்டி நடந்தது.

நீலகிரி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அண்ணா பிறந்த நாளையொட்டி மாரத்தான் போட்டிகள் ஆண்கள், பெண்கள் என 2 பிரிவில் நடத்தப்பட்டு வருகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஊட்டியில் மாரத்தான் போட்டிகள் தொடங்கியது. இதனை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தொடங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட மாணவர்கள், இளைஞர்கள் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் தொடங்கி கலெக்டர் அலுவலகம், ஹில் பங்க், தமிழகம் மாளிகை வழியாக பிங்கர்போஸ்ட் பகுதியை அடைந்து, அங்கிருந்து மீண்டும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தை வந்தடைந்தனர். மாணவர்களுக்கு 8 முதல் 10 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ. தூரமும் மாரத்தான் நடந்தது. முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story