சங்கரன்கோவிலில் மாரத்தான் போட்டி
சங்கரன்கோவிலில் மாரத்தான் போட்டி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ராஜா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பெண்களுக்கு 6 கிலோ மீட்டர் தூரமும், ஆண்களுக்கு 11 கிலோ மீட்டர் தூரமும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.