தேசிய ஒற்றுமை நாளையொட்டி மினி மாரத்தான் போட்டி-கலெக்டர் தொடங்கி வைத்தார்


தேசிய ஒற்றுமை நாளையொட்டி மினி மாரத்தான் போட்டி-கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 Oct 2022 6:45 PM GMT (Updated: 31 Oct 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

தேசிய ஒற்றுமை நாளையொட்டி கிருஷ்ணகிரியில் நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

தேசிய ஒற்றுமை நாள்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தேசிய ஒற்றுமை நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி படிக்க, அனைத்து அரசு அலுவலர்களும் திரும்ப படித்து உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.

முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேசிய ஒற்றுமை மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளி, கல்லூரி

இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை சாலை வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி ஆணையர் (ஆயம்) குமரேசன், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், நில அளவை உதவி இயக்குனர் சேகரன், கலெக்டர் அலுவலக மேலாளர்கள் ராமச்சந்திரன், வெங்கடேசன், தாசில்தார் சம்பத், துணை தாசில்தார் சண்முக சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story