விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
குத்தாலத்தில் குப்பை இல்லா குத்தாலம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.
குத்தாலம்;
குத்தாலத்தில் குப்பை இல்லா குத்தாலம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி ஓடினர்.
மாரத்தான் ஓட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சியில் குப்பை இல்லா குத்தாலம் மினி மாரத்தான் போட்டி நடந்தது. கலெக்டர் மகாபாரதி, ராமலிங்கம் எம்.பி., ராஜகுமார் எம்.எல்.ஏ. பேரூராட்சி தலைவர் சங்கீதாமாரியப்பன் ஆகியோர் கொடி அசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்தனர்.முதலில் 1 முதல் 5-ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி முதலில் நடைபெற்றது. தொடர்ந்து 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாகவும் 12 வகுப்புக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பொது பிரிவினருக்கும் தனியாகவும் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
மாணவர்கள் கூட்டம்
இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். மாரத்தான் போட்டியில் ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடியதால் குத்தாலம் பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.
பரிசு
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பை, மெடல் ஆகியவை பூம்புகார் நிவேதா எம்.முருகன் தலைமையில் வழங்கப்பட்டது.
இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. பரிசு தொகை ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் நிதியிலிருந்தும் பேரூராட்சி பங்களிப்பும் சேர்த்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் உமாமகேஸ்வரிசங்கர், ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குநர் மற்றும் சொத்து மேலாளர் உதய் பஸ்வான், பேரூராட்சி மன்ற துணை தலைவர் சம்சுதீன், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி, , மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துல் ஷா, ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் சிவசங்கர் மற்றும் பலா் கலந்து ெகாண்டனர்.