மாநில அளவிலான மினிமாரத்தான்


மாநில அளவிலான மினிமாரத்தான்
x

மாநில அளவிலான மினிமாரத்தான் உலக சாதனை முயற்சியாக நடந்தது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

தமிழக அரசு பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பரமக்குடி சுகாதார மாவட்டத்தின் சார்பில் மாநில அளவில் 5 கி.மீ. தூரம் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. 46 சுகாதார மாவட்டங்களில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடந்து உலக சாதனை முயற்சியாக நடத்தப்பட்டது. பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பு இருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் உலகநாதபுரத்தில் முடிவடைந்தது. இதை பரமக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் பிரதாப் குமார் தலைமை தாங்கி நடத்தினார். பரமக்குடி சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத் தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போகலூர், மஞ்சூர், நயினார்கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 284 பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பரமக்குடி தனிதாசில்தார் சேகர், காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, ரோட்டரி சங்க உறுப்பினர் அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த உலக சாதனை முயற்சி மாரத்தான் போட்டியை கண்காணிக்க திரம்ப் வேல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தில் இருந்து சம்பத்குமார் கண்காணிப்பாளராக கலந்துகொண்டார்.


Next Story