மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு


மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே ஆழ்வார்குறிச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற வன்னியப்பர் கோவிலில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் "இந்த கோவிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

தொடர்ந்து கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், அரசு மருத்துவமனையாக விரைவில் தரம் உயர்த்தப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட செயலாளர் கணபதி, அமைப்புச் செயலாளர் ராதா, அண்ணா தொழிற்சங்கம் மாநில செயலாளர் சேர்மதுரை, மாவட்ட பொருளாளர் நூருல் ஹமீர், ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், இளங்கோ, அவைத் தலைவர் சுப்பிரமணியன், லிங்கம், நடராஜன், மாசானம், மாரியப்பன், சங்கர், கோவிந்தபேரி சங்கர், மருத்துவமனை ஊழியர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.



Next Story