மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு
முதலியார்பட்டி அரசு பள்ளியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்
கடையம்
கடையம் யூனியனுக்கு உட்பட்ட முதலியார்பட்டி அரசு பள்ளியில் புதிய வகுப்பறையில் கட்டுவதற்காக ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்டமன்ற நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கினார்.
இதேபோல் பொது நிதியிலிருந்து ரூ.23 லட்சம் ஒதுக்கிய நிலையில் நேற்று முதலியார்பட்டி அரசு பள்ளியினை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் விருதுநகர் மாவட்ட செயலாளர் கதிரவன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து, நெல்லை மாநகர பகுதி செயலாளர் காமராஜ், மண்டல அண்ணா தொழிற்சங்க செயலாளர் சேர்மத்துரை, கடையம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அம்மா ராஜவேல், பொட்டல்புதூர் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணிய பாண்டியன், முதலியார்பட்டி ஊராட்சி செயலாளர் சங்கரன், திருமலையப்புரம் மாரியப்பன், ஐந்தாங்கட்டளை அன்பு, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்,