மாண்டஸ் புயல்: நாளை நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு


மாண்டஸ் புயல்: நாளை நடைபெறவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
x

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா, சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலுக்குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தற்போது 520 கி.மீ தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாலையில் வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, புயல் காரணமாக, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழங்கள் அறிவித்துள்ளன.


Next Story