மந்தியூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பில் நெற்களம் திறப்பு
கடையம் அருகே மந்தியூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் மதிப்பில் நெற்களம் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி
கடையம்:
கடையம் யூனியன் மந்தியூர் ஊராட்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய நெற்களம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நெற்களத்தை திறந்து வைத்தார்.
இதில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளர் வேல்சாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story