வேதாமிர்த ஏரி தடாக நந்திகேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா


வேதாமிர்த ஏரி தடாக நந்திகேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா
x
தினத்தந்தி 22 Oct 2023 12:45 AM IST (Updated: 22 Oct 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

வேதாமிர்த ஏரி தடாக நந்திகேஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே நாகை சாலையில் 5 ஏக்கா் பரப்பளவில் வேதாமிர்த ஏரி எனும் தீர்த்தக்குளம் உள்ளது. இங்கு பக்தா்கள் புனித நீராடுவதும், வேதாரண்யேஸ்வரர் கோவில் அஸ்திர தேவர் தீர்த்தவாரி நிகழ்வுகளும் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆட்சி காலத்தில் இந்த ஏரியை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதையும் அமைக்கப்பட்டது. மேலும் ஏரியின் நடுவில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. செலவில் தடாக நந்திகேஸ்வரர் கோவில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் குடமுழுக்கு விழா நடந்தது. தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தது. இதன் நிறைவாக மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதில் முன்னாள் அமைச்சா்கள் ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் நமசிவாயம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சண்முகராசு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் ஆஸ்தான வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.


Next Story