மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மண்டல பூஜை


மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் மண்டல பூஜை
x
தினத்தந்தி 13 Aug 2023 1:45 AM IST (Updated: 13 Aug 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்று மண்டல பூஜை நடைபெற்றது.

திண்டுக்கல்

வடமதுரையில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள் முடிவடைந்த நிலையில் நேற்று மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக 18 குடங்களில் புண்ணிய நதிகளின் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, ருத்ர ஹோமம், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

அதன்பின்னர் மீனாட்சி, சுந்தரேசுவரர், கன்னிமூல கணபதி, வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களான சண்டிகேஸ்வரர், வெள்ளையம்மாள் பொம்மியம்மாள் சமேத மதுரை வீரன் ஆகிய சாமிகளுக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு உற்சவர் மின் அலங்கார தேரில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story