மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு
x

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கேரள பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபாடு நடத்தவார்கள்.

இந்த கோவிலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி கருவறை மேற்கூரையில் தீப்பிடித்தது. அதைத்தொடர்ந்து புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

மரத்தில் தீப்பிடித்தது

இந்த நிலையில் நேற்று மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மேற்கு பகுதியில் உள்ள அரச மரத்தில் தீப்பிடித்தது.

அதாவது இந்த மரத்தின் அடியில் அம்மன் சிலை மற்றும் நாகர் சிலையும் உள் ளது. காலையில் நடை திறந்து மூலஸ்தானத்தில் அபிஷேகம் நடக்கும்போது, இங்குள்ள சாமி சிலைகளுக்கு அபிஷேகம் நடத்தி, அருகில் உள்ள கல் விளக்கில் தீபம் ஏற்றப்படும். அதே போல் நேற்று அதிகாலையில் கல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபம் காற்றில் அசைந்து, அரச மரத்தின் காய்ந்த பட்டையில் பட்டு எரிய தொடங்கியது. இதனால் மரப்பட்டையில் பிடித்த தீயால் காய்ந்த மரப்பட்டை பகுதி கருகியது. எண்ணை தீர்ந்ததும் தீயும் தானாகவே அணைந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மரத்தில் தீப்பிடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் அதிர்ச்சி

கோவில் கருவறை மேற்கூரையில் பிடித்த தீ விபத்திற்கு பின் கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன் கலசாபிஷேகம் நடக்கும் முன்பே கோவில் அரச மரத்தடியில் மீண்டும் தீப்பிடித்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

--


Next Story