ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
ஜமீன் அகரம் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் செண்பகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பிரதிநிதி மணிமேகலை வரவேற்றார். தலைமை ஆசிரியர் முருகன், தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கூட்டத்தில், ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் முழு ஆண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துதல். ஏப்ரல் மாதம் ஆண்டு விழா நடத்துதல். இடையிடையே நிற்கும் மாணவர்களின் பெற்றோரை அணுகி தொடர்ந்து பள்ளிக்கு வர ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முடிவில் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் அன்பரசி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story