வாலிபரிடம் ரூ.64¾ லட்சம் மோசடி செய்தவர் கைது


வாலிபரிடம் ரூ.64¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
x

முந்திரி அனுப்பி கொடுப்பதாக வாலிபரிடம் ரூ.64¾ லட்சம் மோசடி செய்தவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

முந்திரி அனுப்பி கொடுப்பதாக வாலிபரிடம் ரூ.64¾ லட்சம் மோசடி செய்தவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ரூ.64.74 லட்சம் மோசடி

திக்கணங்கோட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35), இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.

அந்த மனுவில், 'கன்னியாகுமரி சர்ச் ரோட்டை சேர்ந்த அகஸ்டின் ராய் (65) என்பவருக்கும், எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவர் முந்திரி வியாபாரம் செய்து வருவதாக என்னிடம் கூறினார். மேலும் முந்திரி வியாபாரம் செய்ய பணம் கொடுத்தால் தேவையான முந்திரியை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இதை நம்பி பல தவணைகளாக ரூ.64.74 லட்சம் பணத்தை அவரிடம் நான் கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிய அவர் எனக்கு முந்திரி அனுப்பி வைக்கவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டார். எனவே அவரை கைது செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

வழக்குப்பதிவு

இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டின் ராயை தேடி வந்தனர். ஆனால் அகஸ்டின் ராய் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

எனவே அவர் எப்போது வந்தாலும் கைது செய்வதற்காக அகஸ்டின் ராய் தொடர்பான விவரங்களையும், அவரது புகைப்படத்தையும் சென்னை, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அகஸ்டின் ராய் நேற்று வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது அகஸ்டின் ராய் போலீசாரால் தேடப்பட்டு வந்தது தெரியவந்தது.

சென்னையில் கைது

இதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக குமரி குற்றப்பிாிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு சென்று அகஸ்டின் ராயை அதிரடியாக கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story