மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபர் கைது


மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபர் கைது
x

மதம் மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாக கூறி ரூ.4.88 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞருக்கு IMO என்ற செயலி மூலமாக சொக்கநாதன் என்ற கணக்கில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால், 10 கோடி ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்குவதற்கு, வருமானவரி செலுத்துவதற்கு உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் கேட்டுள்ளார்.

இதனை நம்பிய இளைஞர், 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாய் பணத்தை ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது தெரியவரவே, என்.சி.ஆர்.பியில் (NCRP) அவர் புகார் பதிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மோசடி வேலையில் ஈடுபட்டது தஞ்சை ஆனந்தம் நகரைச் சேர்ந்த ராஜவேல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


Next Story