ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்


ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம்
x

ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே எடமணல் ஊராட்சியில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா செல்வராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொடங்கி வைத்து உறுதிமொழியை வாசிக்க அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் மாணவர்கள் ஊட்டச்சத்து மிக்க முருங்கைக்காய், கேரட், பீட்ரூட், சுண்டைக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளால் ஆன மாலைகளை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் பிரபு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி, அங்கன்வாடி பணியாளர்கள் இளவேனி, பரமேஸ்வரி, ரங்கநாயகி, ரம்யா, செல்வராணி மற்றும் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story