ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்


ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
x

பணகுடி அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடிக்கும், வள்ளியூருக்கும் இடையே கலந்தபனை ஊருக்கு கிழக்கே ரெயில் தண்டவாளத்திற்கு அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பணகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினார்கள். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் ெரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாராவது கொலை செய்து வீசினார்களா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story