தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு திருப்பதியில் உள்ளதை போன்று கட்டுப்பாடுகள் தேவை


தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு திருப்பதியில் உள்ளதை போன்று கட்டுப்பாடுகள் தேவை
x

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு திருப்பதியில் உள்ளதை போன்று கட்டுப்பாடுகள் தேவை என மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

மதுரை,

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கி, 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. 30-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

சஷ்டியையொட்டி திருச்செந்தூர் கோவில் உள்பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம்.

இந்த ஆண்டு அதற்கு அனுமதிக்கப்படவில்லை. காலம் காலமாக உள்ள இந்த வழக்கத்தை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலின் உள்பிரகாரத்தில் சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு இடம் ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் கேள்வி

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "திருப்பதியில் இது போல கோவிலுக்கு உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் சத்திரமா? இந்த முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். கோவில்கள் வசதி படைத்தவர்களுக்கானது கிடையாது. கடவுள் அனைவருக்கும் சமமானவர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. எனவே கோவில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானதுதான்" என்றனர்.

மேலும், "கோவிலின் உள்ளே சென்று உட்கார்ந்தால் மட்டும் அனைத்தும் சரியாகிவிடாது. உண்மையான பக்தி இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு புதிய வழிமுறைகள் கொண்டு வர வேண்டும்" என்றும் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள் கூறும்போது, "திருப்பதியில் உள்ள நடைமுறைகளைப்போல தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமேசுவரம் என அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான கோவில்களிலும் பல்வேறு கட்டுபாட்டு நடைமுறைகளை கொண்டு வர வேண்டும்.

அனுமதி கூடாது

குறிப்பாக கோவில் முக்கிய பிரகாரங்களில் யாகம் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு அறநிலையத்துறை பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து அறநிலையத்துறை சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story