மக்காச்சோளம் ரூ.28¾ லட்சத்துக்கு விற்பனை
சாத்தூர் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் மக்காச்சோளம் ரூ.28¾ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
சாத்தூர் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் மக்காச்சோளம் ரூ.28¾ லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட வேளாண் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம் ஏலம்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்ட வேளாண் விற்பனை குழு சார்பில் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் மின்னணு ஏல முறையில் கடந்த 1 மற்றும் 2-ந் தேதிகளில் மக்காச்சோளம் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்தில் 5 விவசாயிகளின் 125.1 டன் மக்காச்சோளம் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 3 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.
இதில் மக்காச்சோளம் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ. 2,320 வீதமும், குறைந்தபட்ச விலையாக ரூ.2,280 வீதமும் சராசரி விலையாக ரூ. 2,300 வீதமும் விற்பனை செய்யப்பட்டது. உள் மாவட்ட விவசாயிகள் 3 பேர் கலந்து கொண்டனர்.
ரூ.28¾ லட்சம்
மக்காச்சோளம் ரூ. 28.76 லட்சத்துக்கு விற்பனை செய்ததில் 5 விவசாயிகள் பயனடைந்தனர்.
எனவே சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மின்னணு தேசிய வேளாண் சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது விவரங்களை பதிவு செய்திடவும், இ-நாம் வர்த்தகம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் விளை பொருட்களை விற்பனை செய்யவும் சாத்தூர் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.