நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் - குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
x

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 17, 18-ம் தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக 17, 18-ம் தேதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 17-ம் தேதி காலை 9 மணி முதல் 18-ம் தேதி காலை 9 மணி வரை குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக கூறபட்டுள்ளது.

அதன்படி அடையாறு, தரமணி, இந்திரா நகர், திருவான்மியூர், ஆர்.கே.மடம் சாலை, பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story