பராமரிப்பு பணி : ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து


பராமரிப்பு பணி : ஈரோடு - ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து
x
தினத்தந்தி 1 July 2023 8:37 PM GMT (Updated: 2 July 2023 9:29 AM GMT)

பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு- ஜோலார்பேட்டை ரெயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே ஈரோடு- ஜோலார்பேட்டை (06412) மற்றும் ஜோலார்பேட்டை- ஈரோடு (06411) ஆகிய ரெயில்கள் நாளை (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story