பள்ளிக்கூடத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவு
நாங்குநேரி அருகே பள்ளிக்கூடத்தில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி அருகே உள்ள பூலம் ஊராட்சி வாகைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கவுன்சிலர் நிதி ரூ.1 லட்சம் மதிப்பில் வர்ணம் பூசுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்து அதற்கான விழா நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பிரியா வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை லிசி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story