பராமரிப்பு பணி: விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம்


பராமரிப்பு பணி: விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம்
x

பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி- காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் மற்றும் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் குறிப்பிட்ட நாட்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16854) இன்று முதல் 20-ம் தேதி வரை காட்பாடி- திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி- விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16853) மேற்கண்ட நாட்களில் திருப்பதி- காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story