மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதொழிலாளர்களுக்கு பண்டிகை பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க விவசாய தொழிலாளர்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதொழிலாளர்களுக்கு பண்டிகை பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க விவசாய தொழிலாளர்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகை பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க விவசாய தொழிலாளர்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு பண்டிகை பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 415 மனுக்கள் கொடுத்தனர்.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், மாவட்ட செயலாளர் கு.பொன்னுச்சாமி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் அளித்த மனுவில், வறட்சியும் வேலையின்மையும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் சராசரியாக 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பண்டிகை பணம் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தீபாவளி போனஸ்

தமிழ்நாடு எச்.எம்.எஸ் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பேரவையினர், மாவட்ட தலைவர் ஆர்.ராஜலெட்சுமி தலைமையில் கொடுத்த மனுவில், கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். வீடு கட்டுவதற்கான மானியம் பெறும் நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும். 18 நலவாரியங்களிலும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர்.

ஓய்வூதியர் சங்கம்

தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் எம்.பி.தேலிஸ் வல்தாரிஸ் தலைமையில் கொடுத்த மனுவில், 70 வயதை கடந்த ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குடுப்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவப்படி மாதம் தோறும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story