அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்தி விழா கொடியேற்றம்


அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்தி விழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே விஸ்வநாதபேரி உலகமாதா அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கணபதி ஹோமம், அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சேனைத்தலைவர் சமூக பொது நிர்வாகிகள், துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் ராமராஜ், சமூக நிர்வாகிகள், தலைவர் உலகநாதன், செயலாளர் இரணவீறு, பொருளாளர் குருசாமி, துணை தலைவர் உலகநாதன், துணை செயலாளர் முருகன், துணை பொருளாளர் அருணாசலம், இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத் தலைவர் முருகதாசன், சுப்பிரமணியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மகா சிவராத்திரியான வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாளின் சிவசக்தி குடம் சன்னதிக்கு கொண்டு வந்து பூஜைகள் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மேல் நான்கு கால பூஜைகள், நள்ளிரவு 2 மணிக்கு பூ அலங்காரம், சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்மாள் உற்சவ மூர்த்தியாக அமர்ந்து வீதி உலா வருதல் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி நடக்கிறது.


Next Story