மகாசக்தி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
மகாசக்தி மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால்குட திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு மகாசக்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதில் கே.கே.சி. கல்வி நிறுவன தலைவர் கே.கே.சி.செந்தில்குமார், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பால்குடம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மகா சக்தி மாரியம்மனுக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், ஊர் நாட்டாமைகள் மற்றும் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story