திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா
இஞ்சிமேடு பெரியமலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது.
சேத்துப்பட்டு
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலையில் உள்ள திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. முன்னதாக சனி பிரதோஷ விழா நடந்தது.
மாலை 6 மணி அளவில் அதிகார நந்திக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு அருகம்புல் மாலை, வில்வ இலை, பட்டு வேட்டி அணிவிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் - லலிதாம்பிகை பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கி பக்தி பாடல்கள் பாடினார்கள்.
அதைத்தொடர்ந்து திருமணி சேறைவுடையார் சிவலிங்கத்திற்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், கரும்புச்சாறு ஆகிய மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு 4 கால பூஜைகளை அனந்தன் அய்யர் செய்தார்.
இதில் இரவு முழுவதும் பக்தர்கள் கோவிலில் தங்கி பக்திசொற்பொழிவு கேட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒரு சில பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். விழாவை முன்னிட்டு கோவிலை சுற்றி மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
-
2 காலம்