விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளசிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளசிவன் கோவில்களில் மகாசிவராத்திரி விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவன்கோவில்களில் மகாசிவராத்திாி விழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு முத்தால்வாழி மாரியம்மன் கோவிலில் இருந்து அபிஷேக பொருட்களுடன் ஊர்வலம் வருதலும், இரவு 7 மணிக்கு முதல்கால பூஜையும், சாமிக்கு சிறப்பு அலங்காரமும், 10 மணிக்கு 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 7 மணிக்கு 1,008 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து பகல் 12 மணிக்கு பூர்ணாகுதியும், மாலை 6 மணிக்கு முதல்கால யாக பூஜையும், இரவு 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், 11 மணிக்கு 3-ம் கால பூஜையும் நடந்தது.. இதில் விழுப்புரம் மகாராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

செஞ்சி

செஞ்சியை அடுத்த செத்தவரை நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு மேல் காமாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத பெருமானுக்கு சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவஜோதி மோன சித்தர் முன்னிலையில் பிரதோஷ பூஜை நடைபெற்றது. பின்னர், கைலாய வாயில் வழியாக சாமி தேர் பவனி நடைபெற்றது.

தொடர்ந்து சாமிக்கு மகாசிவராத்திரி பூஜை இரவு 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. இதில் ஏராளமான சிவாச்சாரியார்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் செஞ்சி சிறு கடம்பூரில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் பீரங்கி மேடு பகுதியில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் மகாசிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி புவனேஸ்வரி உடனுறை புவனேஸ்வரர் கோவில், தர்மஸபவர்த்தினி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், எசாலம் திரிபுர சுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் மகா சிவராத்திாி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story