மதுரை தமுக்கம் மாநாட்டு மையம், பன்னடுக்கு வாகன காப்பகம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


மதுரை தமுக்கம் மாநாட்டு மையம், பன்னடுக்கு வாகன காப்பகம்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
x

மதுரை தமுக்கம் மாநாட்டு மையம், பன்னடுக்கு வாகன காப்பகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மதுரை

மதுரை தமுக்கம் மாநாட்டு மையம், பன்னடுக்கு வாகன காப்பகம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

திறப்பு விழா

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47 கோடியே 72 லட்சம் செலவில் மாநாட்டு மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் நேரு, சாத்தூர் ராமசந்திரன், ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி மாநாட்டு மையத்தை ரிப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாநாட்டு மையம் முழுவதையும் சுற்றி பார்த்தார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.41 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள பன்னடுக்கு வாகன மையத்தையும் திறந்து வைத்தார்.

விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங், மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி., பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாநகராட்சி மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சந்தித்தனர்.

வாகன நிறுத்தம்

மீனாட்சி அம்மன் கோவில் அருகே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.41.96 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தரைமட்டத்திற்கு கீழ் 2 தளங்கள், தரைமட்டத்திற்கு மேல் 2 தளங்கள் என மொத்தம் 69,575 ச.மீட்டர் பரப்பளவில் 4 தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்திற்கு கீழ் உள்ள 2 தளங்களில் சுமார் 110 நான்கு சக்கரவாகனங்கள், 1400 இருசக்கர வாகனங்கள் சிரமமின்றி நிறுத்தும்வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தரைதளத்தில் தகவல் மையம் மற்றும் மதுரை மாநகரின் கலாசார பெருமைகளை பறைசாற்றும் வகையில் புராதன சின்னங்கள் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாதாந்திர வாடகை அடிப்படையில் 128 கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு கண்காணிப்பு கேமராக்கள், மின்விளக்கு வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், தீ தடுப்பு பாதுகாப்பு வசதிகள், அவசரகால வெளியேறும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

மாநாட்டு மையம்

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான தமுக்கம் மைதானத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.47.72 கோடி செலவில் 10,082 ச.மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் புதிய "மதுரை மாநாட்டு மையம்" கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 3 ஆயிரத்து 500 பேர் வரை சிரமமின்றி அமர்ந்து பங்கு கொள்ளும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி அரங்கு உள்ளது. 800 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் சமையல் அறையுடன் கூடிய உணவு அருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மையத்தில் நடைபெறும் விழாக்கள், கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு நவீன நகரும் தடுப்பான்களை கொண்டு பல்வேறு அளவில் உள்அரங்கை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும் வசதியும் உள்ளது. இந்த மையத்தின் தரைதளத்தின் கீழ் உள்ள தளத்தில் சுமார் 250 நான்கு சக்கர வாகனங்கள், 215 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிட வசதியும் உள்ளது.


Next Story