மதுரை மீனாட்சி அம்மன் வசமே வந்தடைந்த 20 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் இடம்...!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 20 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் இடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் அர்த்தஜாம பூஜையின் போது ருத்ர ஜெப உபயம் மற்றும் தயிர் வழங்குபவர்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மன்னர்களால் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தக்ஷிணாமூர்த்தி அய்யர் மற்றும் முக்கோனார் ஆகிய இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு நபர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் உரிய விசாரணைக்கு பின் 20 இலட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவிலின் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story