தேர்வு தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு

தேர்வு தொடர்பாக பல்கலைக்கழகங்களுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு
x

மாணவர்கள் ஓராண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

மாணவர்கள் ஓராண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் செண்பகம் என்பவர் ஒரே ஆண்டில் பி.எட் படிப்பையும் எம்.எஸ்.சி படிப்பையும் படித்துள்ளதாக கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் பணி வழங்கவில்லை. இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் அவர் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஶ்ரீமதி, பல்கலைக்கழகங்களில் காலாண்டர் ஆண்டு, கல்வி ஆண்டு என்று இருமுறைகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால் தேர்வு வாரியத்துக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது என்றார்.

ஓராண்டில் 10 மாதங்கள் படித்து முடித்த பிறகே பல்கலைக்கழகங்கள் தேர்வு நடத்த வேண்டும் என்று கூறிய நீதிபதி, மனுதாரர் வெவ்வேறு ஆண்டுகளில் படித்திருப்பதால் அவருக்கு இரண்டு வாரத்திற்குள் பணி வழங்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Next Story