மதுரை தீ விபத்து: விடுதி உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


மதுரை தீ விபத்து: விடுதி உரிமையாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
x

விடுதி உரிமையாளர் இன்பா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். விடுதிக் கட்டடம் முறையான அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமலும் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட விசாகா பெண்கள் விடுதிக் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பாக விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story