தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு லக்னோ மாணவர்கள் வருகை


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு லக்னோ மாணவர்கள் வருகை
x

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு லக்னோ மாணவர்கள் வந்தனர். அவர்கள் பறை இசைத்து மகிழ்ந்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கு லக்னோ மாணவர்கள் வந்தனர். அவர்கள் பறை இசைத்து மகிழ்ந்தனர்.

லக்னோ மாணவர்கள்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு லக்னோ பல்கலைக்கழகத்தில் இருந்து 36 மாணவர்கள் வந்தனர். இவர்களைத் தழிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பதிவாளர் (பொறுப்பு) இளையாப்பிள்ளை வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல்நாட்டுத்தமிழ்க்கல்வி துறைத்தலைவர் குறிஞ்சிவேந்தன் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுவடிப்புல பேராசிரியர் கண்ணன், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத்தலைவர் துளசேந்திரன், பேராசிரியர் பவானி, ஓலைச்சுவடித்துறைத்தலைவர் கலாஸ்ரீதர், பழங்குடி மக்கள் ஆய்வு மையத் தலைவர் சிவராமன், நூலகர் வேல்முருகன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

பறை இசைத்தனர்

இதனையடுத்து மாணவர்நல மைய இயக்குனர் சீமான் இளையராஜா, இணைஇயக்குனர் ரமேஷ்குமார் ஒருங்கிணைப்பில் லக்னோ மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மோடி ஆவணம், மொழிப்புலம், சுவடிப்புலம், நூலகம், நாடகத்துறை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டனர். தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய இசை கருவியான பறையை மாணவர்களுடன் இசைத்து மகிழ்ந்தனர்.


Next Story