நாட்டு சோளத்தில் மகசூல் குறைவு
ஆலங்குளம் பகுதியில் நாட்டு சோளத்தில் மகசூல் குறைந்தது. எதிர்பார்த்த விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் நாட்டு சோளத்தில் மகசூல் குறைந்தது. எதிர்பார்த்த விலையும் கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நாட்டு சோளம்
ஆலங்குளம் பகுதியில் தொம்பகுளம், கோபாலபுரம், கொங்கன்குளம், பழையாபுரம், பாரைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 60 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நாட்டு சோளம் பயிரிட்டு உள்ளனர்.
இந்த நாட்டு சோளம் பிஸ்கட் போன்ற சத்தான பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. இந்த சோளம் 4 மாதத்தில் பலன் தரக்கூடியது ஆகும். பல்வேறு பயன்கள் நிறைந்த நாட்டு சோளத்தை ஆலங்குளம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சாகுபடி செய்துவருகிறார்கள். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 குவிண்டால் வரை மகசூல் கிடைத்தது. ஆனால் தற்போது ஏக்கருக்கு 6 முதல் 8 குவிண்டால் வரை தான் மகசூல் கிடக்கிறது.
மகசூல் குறைவு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் நாட்டு சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாங்கள் எதிர்பார்த்த மகசூலும் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த அளவிற்கு விலையும் கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு ரூ.3,800 முதல் ரூ.4,100 வரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆனால் தற்போது ரூ.3,300 முதல் ரூ.3,800 வரை தான் விற்பனை ஆகிறது. மகசூலும் குறைந்தது. விலையும் குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.