கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி பூங்காவில் குவிந்த ஜோடிகள்


கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி பூங்காவில் குவிந்த ஜோடிகள்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி

காதலர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி பூங்காவில் காதல் ஜோடிகள் குவிந்தனர்.

காதலர் தினம்

உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் பரிசு பொருட்களை வழங்கி அன்பை பரிமாறி கொள்வது வழக்கம். அதேபோல உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காதலர் தினத்தையொட்டி காதலர்கள், தங்களது காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா பகுதியில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் மரத்தடியில் அமர்ந்தபடி பேசி பொழுதை கழித்தனர். மேலும் அவர்கள் மலர்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர்.

போலீசார் கண்காணிப்பு

இதேபோல ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலும் காதல் ஜோடிகள் குவிந்தனர். காதலர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி அணை போலீசார் அணை மற்றும் அவதானப்பட்டி பூங்காக்களில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காதல் தினத்தையொட்டி கடைகள் பரிசு பொருட்கள், மலர்கள் விற்பனை படுஜோராக நடந்தது.

மேலும் திருமணமான கணவர்கள், அவர்களின் காதல் மனைவிக்கு ரோஜா பூக்களை வாங்கி கொடுப்பதையும் காண முடிந்தது.


Next Story