லாட்டரி சீட்டுகள்- மது விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகள்- மது விற்ற 3 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள்- மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் மதுபாட்டில் விற்பனை செய்வதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இலுப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கதவம்பட்டியை சேர்ந்த அழகன் (வயது 65), பள்ளிவாசல்காடு பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன்கள், மோட்டார் சைக்கிள், ரூ.2,650 ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் இலுப்பூர் அருகே உள்ள மலைக்குடிப்பட்டி பஸ் நிலையம் பகுதியில் மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட மலைக்குடிப்பட்டி இந்திராநகரை சேர்ந்த பொன்னுசாமி (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 65 மதுபாட்டில்கள், ரூ.1,640 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story