லாரி டிரைவர் கைது


லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2023 2:30 AM IST (Updated: 31 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே லாரி-கார் மோதியதில் தந்தை, மகன் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு அருகே லாரி-கார் மோதியதில் தந்தை, மகன் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


தந்தை, மகன் பலி


பொள்ளாச்சி அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 50). தொழில் அதிபர். இவருடைய மனைவி சித்ராதேவி (47). இவர்களுடைய மகன் மொஹிந்த் (18). இவர்கள் 3 பேரும் காரில் பெங்களூரு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். காரை மொஹிந்த் ஓட்டினார்.


கோவை-பொள்ளாச்சி சாலையில் தாமரைக்குளம் அருகே வந்தபோது, முன்னால் சென்ற லாரி சிக்னல் போடாமல் திடீரென யூ டர்ன் பகுதியில் திரும்பியது. அப்போது லாரியும் காரும் பயங்கரமாக மோதியது. இதில் காரில் வந்த பரமேஸ்வரன், மொஹிந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். சித்ராதேவி பலத்த காயம் அடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


லாரி டிரைவர் கைது


இந்்த விபத்து தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் லாரி டிரைவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் திரும்பியது தான் விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது.


இதையடுத்து லாரி டிரைவரான கிணத்துக்கடவு அருகே உள்ள மாம்பள்ளி முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த பழனிசாமி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.



Next Story