ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் சாமி சிலை உடைப்பு


ஒத்தப்பனை சுடலை ஆண்டவர்  கோவிலில் சாமி சிலை உடைப்பு
x

நெல்லை சந்திப்பு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் சாமி சிலை உடைக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவிலில் சாமி சிலை உடைக்கப்பட்டது.

சாமி சிலை உடைப்பு

நெல்லை சந்திப்பு தைப்பூச மண்டபம் அருகே ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு பேச்சி, பிரம்மசக்தி, ஒத்தப்பனை சுடலை ஆண்டவர், முண்டமாடசாமி, கொம்புமாடசாமி, சடையழகன் மாயாண்டி உள்ளிட்ட சாமி சிலைகள் உள்ளன.

நேற்று காலையில் கோவிலுக்கு நிர்வாகி பாலசுப்பிரமணியன் வந்தார். அப்போது கோவிலில் இருந்த சடையழகன் மாயாண்டி சாமி சிலை உடைக்கப்பட்டு தரையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு வந்த இந்து அமைப்பினர், சாமி சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story