பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நெடுந்தூர ெரயில் இயக்க வேண்டும்


பெருந்தலைவர் காமராஜர் பெயரில் நெடுந்தூர ெரயில் இயக்க வேண்டும்
x

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருதுநகர் வழியாக நெடுந்தூர ெரயில்கள் இயக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.

விருதுநகர்


பெருந்தலைவர் காமராஜர் பெயரில் விருதுநகர் வழியாக நெடுந்தூர ெரயில்கள் இயக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.

ஆய்வு

மத்திய அரசு ெரயில் நிலையங்களில் பயணிகளுக்கான வசதி மற்றும் தேவைகளை பரிந்துரை செய்வதற்காக குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன், மேற்கு வங்கத்தைசேர்ந்த அபிஜித் தாஸ், தெலுங்கானா கோட்ட பாலா உமாராணி மற்றும் கர்நாடகாவை சேர்ந்த மதுசூதனன் ஆகியோர் நேற்று விருதுநகர் ெரயில் நிலையம் வந்தனர். விருதுநகர் ெரயில் நிலையத்தில் ெரயில்வே அதிகாரிகளுடன் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கான தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

வலியுறுத்தல்

அப்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் மற்றும் மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க.வினர் இக்குழுவினரை சந்தித்து விருதுநகர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு வலியுறுத்தினர்.

அதில் விருதுநகர் ெரயில் நிலைய நடைமேடைகளில் மின்சார தானியங்கி இழுவை படிக்கட்டு அமைத்திட வேண்டும். கிழக்கு பகுதியில் பயணச்சீட்டு அறை அமைக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் வழியாக நாகர்கோவிலில் இருந்து தேஜஸ் போன்ற நெடுந்தூர ெரயில் சேவையை அதிகரிப்பதுடன், பகல் நேர குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் காமராஜர் பெயரில் ரெயில்கள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட மத்திய குழுவினர் இதுகுறித்து வருகிற 8-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் உறுதியான முடிவெடுக்கப்படும். விருதுநகர் ெரயில் நிலையத்தில் ெரயில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதி அளித்தனர்.


Related Tags :
Next Story