பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும்மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்:பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
தேனி
பெரியகுளம் நகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சாா்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், மாடுகளை அதன் உரிமையாளர்கள் தங்களது சொந்த இடங்களில் கொட்டகை அமைத்து பராமரிக்க வேண்டும். தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரிய விடக்கூடாது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி சாலை, தெருக்களில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் அதனை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்து வைக்கப்படும். மேலும் உரிமை கோரப்படாத மாடுகள் பொது ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story