செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலச்சினை மற்றும் சின்னம் - முதல்-அமைச்சர் வெளியிட்டார்


செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலச்சினை மற்றும் சின்னம் - முதல்-அமைச்சர் வெளியிட்டார்
x

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 28-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க விருக்கிறது. இதில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனா்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையண்பு, அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை செயலாளர், செஸ் ஒலிம்பியாட் குழுவினர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை ஒளிப்பட காட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான கவுண்ட்-டவுனை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.


Next Story