துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க இடம்


துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க இடம்
x

வாணியம்பாடி அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு ெசய்தார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டும், பல்வேறு பிரிவுகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதற்கான மையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இதில் வாணியம்பாடி அருகே நாயனசெருவு கிராமத்தின் பகுதியில் உள்ள எத்தமலை அடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான ஒதுக்கப்படாத காட்டு புறம்போக்கு பகுதி உள்ளது.

இப்பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைப்பதற்கு ஏதுவான இடம் உள்ளதா என இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ரூபன், தனிப்பிரிவு போலீஸ் சுரேஷ், பாரதி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story