சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாங்குநேரியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி அரசு உணவு கிட்டங்கி முன்பு சுமை தூக்கும் தொழிலாளிகள் சங்க துணைத்தலைவர் வைகுண்டராஜ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய பயிர்களை ஆடு மாடுகள் அழிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மயத்தை அனுமதிக்கக் கூடாது, சுமை தூக்கும் கூலியை ஒரு நாள் ஊதியம் அடிப்படையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story