சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x

சுமை தூக்கும் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் தனபாலன் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாநில பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கடந்த 1997-ம் ஆண்டு மே தினத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்த பணி நிரந்தரத்திற்கு உண்டான சலுகைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சங்க அங்கீகார தேர்தலை காலதாமதம் இன்றி உடனடியாக நடத்த வேண்டும். ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் புகுத்தும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். கூலி கேட்ட தொழிலாளிக்கு கூலி வழங்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணி பதிவேட்டை அனைத்து மண்டலத்திலும் தொழிலாளர்களுக்கு சரியாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த கட்டமாக வருகிற 24-ந்தேதி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் வீரராகவன் கூறினார்.


Next Story