எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்க்கை தொடங்கியது


எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்க்கை தொடங்கியது
x

வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

அங்கன்வாடி மையங்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் அங்கு குழந்தைகள் சேர்க்கை நிறுத்தப்பட்டது. மேலும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி வால்பாறை தாலுகாவில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்க்கை தொடங்கி உள்ளது.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு குழந்தைகள் சேர்க்கை நிறுத்தப்பட்டு விட்டதால், வால்பாறையில் உள்ள பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வால்பாறையில் 42 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. முட்டை, காய்கறிகள் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.

சேர்க்கை தொடங்கியது

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அங்கன்வாடி திட்ட அலுவலர் ரதி பிரியா கூறும்போது, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் வயதுக்கு ஏற்ப உடல் எடை உள்ளதா என்பதை சரிபார்க்க மையங்களில் உடல் எடை மற்றும் உயரம் அளவு செய்யப்படும். எடை குறைந்த குழந்தைகள் மீது அக்கறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் முறையான ஆரம்ப கல்வி கற்று தரப்படுகிறது. குழந்தைகளின் செயல்திறன் கண்காணிக்கப்பட்டு, மூளை வளர்ச்சி பராமரிக்கப்படுகிறது. அவர்களது செயல்திறனுக்கு ஏற்ப கண்காணிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தேவையான அளவு தூக்கம் கிடைப்பதற்கும், புத்துணர்வோடு குழந்தைகளை வழிநடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் 42 அங்கன்வாடி மையங்களிலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது குழந்தைகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்க முன்வர வேண்டும் என்றார்.


Next Story